ADDED : அக் 24, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை முத்தனாங்கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி ராம்குமார் 31. இவரை 2022ல் அதே பகுதி நுாற்பாலையில் வேலைபார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த அனுபம் பவுரி 21, மஹாவீர் திபர் 22 , கல்லால் தாக்கி கொலை செய்தனர். ஜாமினில் வந்த அனுபம்பவுரி தலைமறைவானார். இவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அதன்படி வடமதுரை எஸ்.ஐ., சித்திக், போலீஸ்காரர் விவேக் ஆகியோர் மேற்குவங்கம் சென்று அனுபம் பவுரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.

