sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டின் நடுவில் உருவான பள்ளத்தால் விபத்து

/

ரோட்டின் நடுவில் உருவான பள்ளத்தால் விபத்து

ரோட்டின் நடுவில் உருவான பள்ளத்தால் விபத்து

ரோட்டின் நடுவில் உருவான பள்ளத்தால் விபத்து


ADDED : நவ 29, 2024 06:54 AM

Google News

ADDED : நவ 29, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுரங்கபாதையில் கழிவு நீர் : திண்டுக்கல் ஆர். எம். காலனியிலிருந்து அறிவு திருக்கோயில் செல்லும் ரோடு ரயில்வே சுரங்க பாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் வழியில் வாகன ஓட்டிகள் சென்று வருவதால் தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.

--வர்ஷினி, திண்டுக்கல்.

தரைப்பாலம் சேதம் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு பகுதி ரோட்டில் தரைபாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தில் குச்சியை நட்டு வைத்துள்ளனர். இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் செல்வோர் நிலைதடுமாறி விழுகின்றனர்.

-மகேந்திரன், திண்டுக்கல்.

குப்பையால் சுகாதாரக்கேடு : திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு எம். வி.எம். கல்லுாரி அருகே மேம்பாலம் கீழ்பகுதியில் குவிந்துள்ள குப்பை பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையை கால்நடை மேய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.

-சிவக்குமார். திண்டுக்கல்.

கழிவு நீர் தேக்கத்தால் சிரமம் : எஸ். தும்மலப்பட்டி நடுநிலைப் பள்ளி முன்பாக சாக்கடை ஓடுவதால் இதை துார்வாராததால் கழிவு நீர் தேங்கி துார்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .தொற்று நோய் பரவுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கி.கந்தசாமி எஸ்.தும்மலப்பட்டி.

சேதமான மின்கம்பம் : திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு ஜம்புளியம்பட்டி டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் சேதமடைந்து தொங்கி கொண்டு உள்ளது. எந்நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மழை காலம் என்பதால் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-ரவி, திண்டுக்கல்.

ரோடு வசதி இல்லை : ஆத்துார் ஒன்றியம் செட்டியபட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை செல்லும் ரோட்டில், மகாத்மா காந்தி நகரில் போதிய ரோடு வசதி இல்லை. மழை நேரத்தில் சேரும் சகதியால் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கு ரோடு அமைக்க வேண்டும். -

-அ.செந்தில்குமார், செட்டியபட்டி.

நெடுஞ்சாலையில் சாக்கடை நீர் : எரியோடு புதுரோட்டில் திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் சாக்கடை நீர் பாய்வதால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் திடீரென ஒதுக்கி செல்ல முற்படும் போது விபத்தில் சிக்குகின்றன. இதற்கு நெடுஞ்சாலை துறை வழி காண வேண்டும். ---

-ரவி, எரியோடு.






      Dinamalar
      Follow us