/
புகார் பெட்டி
/
திண்டுக்கல்
/
ரோட்டில் குவிக்கப்படும் தேங்காய் நார்களால் விபத்து
/
ரோட்டில் குவிக்கப்படும் தேங்காய் நார்களால் விபத்து
ரோட்டில் குவிக்கப்படும் தேங்காய் நார்களால் விபத்து
ரோட்டில் குவிக்கப்படும் தேங்காய் நார்களால் விபத்து
ADDED : நவ 26, 2025 04:31 AM

ரோட்டில் ஓடும் கழிவுநீர்
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .துர்நாற்றத்துடன் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. ரோடும் சேதமடைகிறது.
அம்பிகா, திண்டுக்கல்.
குப்பையால் தொற்று
திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் அருகே குப்பையை கொட்டி பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பை தொற்று நோய் அபாயம் உள்ளது
. ஹரிஷ், திண்டுக்கல்.
பள்ளத்தால் விபத்து
வக்கம்பட்டியில் இருந்து கும்மம்பட்டி செல்லும் ரோடு அமைத்து ஒரு மாதமாகியும் நோட்டின் இரு புறமும் மண் போடாததால் பள்ளமாக உள்ளது .வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
சி. லோகஹாசன் கும்மம்பட்டி .
கால்நடைகளால் இடையூறு
திண்டுக்கல் - பழநி ரோடு பைபாஸ் அருகே கால்நடைகள் ரோட்டில் படுத்து துாங்குவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது . வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.
கார்த்தி, திண்டுக்கல்.
சேதமான மின் கம்பம்
குஜிலியம்பாறை ஆர்.கோம்பை ஓட்டை குளத்தில் மின் கம்பம் சேதமடைந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.நடராஜன், ஓட்டைக்குளம்.
ரோட்டில் மழை நீர் தேக்கம்
வேடசந்துார் அருகே சேனான்கோட்டை ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .ராமகிருஷ்ணன், சேனான்கோட்டை.
தேங்காய் நார்களால் விபத்து
கணவாய்ப்பட்டியில் இருந்து செங்குறிச்சி செல்லும் பாரஸ்ட் ரோட்டில் தேங்காய் நார்களை தனியார் ரோட்டில் கொட்டுவதால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சக்திவேல், செடிபட்டி.

