/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் சேதமுற்ற சாக்கடைகளால் விபத்து
/
'கொடை' யில் சேதமுற்ற சாக்கடைகளால் விபத்து
ADDED : அக் 26, 2025 04:54 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் போக்குவரத்து நிறைந்த ரோட்டில் சாக்கடை சீரமைப்பு பணி முழுமை பெறாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம், படகு குழாம்,வில்பட்டி, மேல்மலை செல்லும் முக்கிய சந்திப்பு பகுதியில் திறந்தவெளி சாக்கடை உள்ளது. இப்பகுதியில் செயல்படும் வணிக வளாகங்கள் காங்கிரீட் மூடி அமைத்ததால் சாக்கடை துார் வாரததால் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இந்த கழிவு நீர் வாய்க்காலில் பி.எஸ்.என்.எல்., கேபிள்களும் பதிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள விடுதி கழிவுகளும் இதில் செல்லும் நிலையில் இவை துார்வாரப்படாமல் வர்நாற்றம் வீசுகிறது.
மக்கள் அதிக அளவு கூடும் இப்பகுதியில் மழை பெய்யும் போது கழிவு நீர் ஆறாக பாய்ந்து அவை நேரடியாக ஏரியில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சூழலில் ஒரு வாரத்திற்கு முன் அடைப்பை சீர் செய்வதற்கு சாக்கடை மூடி அமைப்பை தோண்டிய நிலையில் ரோட்டோர பக்கவாட்டு பகுதி சேத மடைந்தது.
சாக்கடை முழுமையாக துார்வாராத நிலையில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாக்கடை பணியை துரிதபடுத்தி ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

