'கொடை' வெள்ளி நீர்வீழ்ச்சி பாலத்தில் விபத்து அபாயம்
'கொடை' வெள்ளி நீர்வீழ்ச்சி பாலத்தில் விபத்து அபாயம்
UPDATED : நவ 18, 2026 11:19 PM
ADDED : நவ 18, 2026 09:06 PM

கொடைக்கானல்:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பாலம் சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது.
சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி. நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதன் அழகை ரசித்துச் செல்கின்றனர்.
ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியின் தண்ணீரை கடக்க பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இவற்றில் சாய்ந்தபடி பயணிகள் செல்பி எடுத்து மகிழ்வது வழக்கம். இச்சூழலில் சேதமடைந்த கைப்பிடி சுவரால் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையின் போது பாலத்தின் கைப்பிடி சுவர் மேலும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே சேதமடைந்த பாலத்தின் கைப்பிடி சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
