/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியின்றி வெடி தயாரிப்பில் விபத்து; விரல்களை இழந்த தொழிலாளி
/
அனுமதியின்றி வெடி தயாரிப்பில் விபத்து; விரல்களை இழந்த தொழிலாளி
அனுமதியின்றி வெடி தயாரிப்பில் விபத்து; விரல்களை இழந்த தொழிலாளி
அனுமதியின்றி வெடி தயாரிப்பில் விபத்து; விரல்களை இழந்த தொழிலாளி
ADDED : ஜன 21, 2026 07:00 AM

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோயில்பட்டியில் வன வேட்டைக்கான வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் கூலித்தொழிலாளியின் கை விரல்கள் துண்டாகி சிதறின.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவார கிராமங்களில் காட்டுப்பன்றிகள், காட்டுமாடுகள், மயில்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அனுமதியற்ற வெடி உபயோகம் தாராளமாக உள்ளது.
இதற்காக போதிய பாதுகாப்பற்ற சூழலில் உரிய அனுமதி பெறாமல் பலர் வெடி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.
போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால் அனுமதியற்ற வெடி தயாரிப்பு சின்னாளபட்டி, அம்பாத்துறை, செம்பட்டி பகுதிகளில் தாராளமாக நடக்கிறது.
இதனால் அடிக்கடி வெடி விபத்துக்கள், உயிரிழப்புகள் நடக்கின்றன.
சின்னாளபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டியைச் சேர்ந்த கணேசன் 51, வீட்டில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வெடி தயாரித்து வந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது வெடி தயாரித்த போது கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது இரு கைகளின் விரல்கள் துண்டாகி சிதறின. வீட்டின் கூரை சேதமடைந்தது. போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர். காயமடைந்த கணேசன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டி.எஸ்.பி., சங்கர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

