/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர்களை இயக்கும் சிறார்களால் விபத்து; போலீசார் நடவடிக்கை தொடர்ந்தும் 'ஜோர் '
/
டூவீலர்களை இயக்கும் சிறார்களால் விபத்து; போலீசார் நடவடிக்கை தொடர்ந்தும் 'ஜோர் '
டூவீலர்களை இயக்கும் சிறார்களால் விபத்து; போலீசார் நடவடிக்கை தொடர்ந்தும் 'ஜோர் '
டூவீலர்களை இயக்கும் சிறார்களால் விபத்து; போலீசார் நடவடிக்கை தொடர்ந்தும் 'ஜோர் '
ADDED : ஆக 27, 2024 01:49 AM

பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை தொடர்ந்தும் டூவீலர்களை இயக்கும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அதிவேகத்தில் செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது.
மாவட்டத்தில் நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை உட்பட நகர ,ஊராட்சி சாலைகளில் டூவீலர்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதில் சிறார்கள் அதிவேகமாகவும் மூன்று நபர்கள் அமர்ந்தும் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலாேனார் ஹெல்மெட் அணிவது இல்லை.
அதி வேகமாக செல்வதால் எதிரே வரும் வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. கல்லுாரி, பள்ளி செல்லும் நேரங்களில் பலர் அதிவேகமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பயணிக்கின்றனர். விபத்து ஏற்படும் போது பலத்த காயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர்கள்தான் டூவீலர்களில் அதிகம் பயணிக்கும் நிலை உள்ளது. விதி முறைகளை மீறி விருப்பம்போல் பயணிப்பதால் மற்ற வாகனங்களில் செல்வோரும் விபத்துக்களை சந்திக்கும் நிலையும் தொடர்கிறது . இது தொடர்பாக பெற்றோர், பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் .
போலீசாரும் ஆங்காங்கு சோதனையிட்டு டூவீலர் ஓட்டும் சிறார்களை கண்டறிந்து எச்சரிப்பதும்,ெபற்றோரை அழைத்து அறிவுரை வழங்கினாலும் இந்நிலை அதிகரிக்கதான் செய்கிறது .
......
ஹெல்மெட்டும் அணிவதில்லை
டூவீலர்களில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிக்கொண்டு அதிக வேகத்தில் சாலைகளில் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் அதிகம் உள்ளனர். சிறுவர்களால் வாகன விபத்து ஏற்படும்போது இவர்கள் பாதிப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களும் பாதிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட்டும் அணிவதில்லை. இதை கட்டுப்படுத்த பெற்றோர்களும் போதிய அறிவுரை வழங்க வேண்டும்.
ராம் சுந்தர், தனியார் நிறுவன ஊழியர், பழநி .
...............