/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறுகலான ரோடால் தொடரும் விபத்துக்கள்
/
குறுகலான ரோடால் தொடரும் விபத்துக்கள்
ADDED : மே 13, 2025 05:51 AM

வேடசந்துார் : வேடசந்துார் ஆத்துமேட்டிலிருந்து பழநி செல்லும் ரோடு குறுகலாக உள்ளதால் இதன் ரோடை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை முன் வர வேண்டும்.
வேடசந்துார் ஆத்துமேட்டிலிருந்து ஒட்டன்சத்திரம், பழநி செல்லும் மெயின் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் அரை கி.மீ., துாரத்தில் திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலை செல்கிறது.
இதற்காக பழநி செல்லும் ரோட்டில் குறுக்கிடும் பகுதியில் கரூர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் உள்ளது.
மேம்பாலம் கீழ் செல்லும் பழநி ரோடு வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இந்த வழித்தடத்தில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் கூடுதலாக நடந்து செல்லும் நிலையில், நுாற்பாலை வாகனங்கள், பள்ளி கல்லுாரி வாகனங்கள் கூடுதலாகவே சென்று வருகின்றன.
இப்பகுதி மக்களின் நலன் கருதி ரோட்டோரத்தின் இருபுறமும் நுாறு மீட்டர் துாரத்திற்கு அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். இதோடு போதிய சிக்னல்களை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கு றுகலா ன ரோடு
பி.முருகேசன், பொறியாளர், வேடசந்துார்: நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட மேம்பாலம் கீழ்செல்லும் பழநி ரோடு குறுகியதாக உள்ளது.
இதோடு இந்த ரோடு ஒரு நேர்கோட்டில் செல்லவில்லை. மிக வளைவாக உள்ளது. பாலத்தின் மேற்கு பகுதியில் ரோட்டை அகலப்படுத்தி அந்த இடத்தில் சென்டர் மீடியன் அமைத்து போக்குவரத்தை சீராக்க வேண்டும்.
அந்த இடத்தில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளதால் போதிய எச்சரிக்கை பலகைகளும் அமைக்க வேண்டும்.
தே வை முறையான தீர்வு
ஏ.ராஜமோகன், சமூக ஆர்வலர், வேடசந்துார்: பாலம் பகுதி மிக வளைவாக உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. ஏப்ரலில் நடந்த விபத்தில் 3 பேர் இறந்தது குறிப்பிடத் தக்கது. ரோட்டை அகலப்படுத்தி போதிய சிக்னல்களை அமைத்து போக்குவரத்தை சீராக்க வேண்டும்.
வாகன போக்குவரத்து வேகம் அதிகரித்துள்ள நிலையில் விபத்துக்கள் நடைபெறாத வகையில் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்ய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் முன் வர வேண்டும். அதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, வாகன ஓட்டிகள் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி முறையான தீர்வு காண வேண்டும்.