/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்டமான அரசு பஸ்களா-ல் தொடரும் விபத்து
/
கண்டமான அரசு பஸ்களா-ல் தொடரும் விபத்து
ADDED : டிச 06, 2024 06:25 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிலிருக்கும் கண்டமான அரசு பஸ்களால் நடக்கும் விபத்துக்களில் சிக்கி நடந்து செல்வோர்,டூவீலர்களில் பயணிப்போர் என பல தரப்பினரும் தங்கள் வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற பஸ்களை கண்டறிந்து அவற்றை உடனே மாற்றுவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் இறங்க வேண்டும் .
திண்டுக்கல்,தேனி மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 500க்கு மேலான அரசு பஸ்கள் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. ூசமீபத்தில் திண்டுக்கல் மண்டலத்திற்கு 50க்கு மேலான புது பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பஸ்கள் அனைத்தும் திண்டுக்கல்லிலிருந்து வெளியூருக்கு செல்லும் வழித்தடத்தில் செல்கின்றன.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிய 100க்கு மேலான கிராமங்களுக்கு செல்லும் பழைய டவுன் பஸ்களில் அடிக்கடி ஏற்படும் பிரேக் டவுன்,டயர் வெடிப்பு,பஞ்சர்,தொழில் நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இதில் பயணிக்கும் மக்கள் பாதிக்கின்றனர்.
பயணத்தின் போது திடிரென பிரேக் பிடிக்காமல் ஏற்படும் கோளாறுகளால் அருகிலிருக்கும் கடைகளுக்குள் புகுவது,ரோட்டில் நடந்து செல்லும் அப்பாவி மக்களை அடித்து துாக்குவது,டூவீலர்களில் செல்வோர் மீது மோதி விபத்தை ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் நடக்கின்றன. இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் அப்பாவி மக்கள் தங்கள் கை,கால்களை இழந்து காயமடைந்து தங்கள் வாழ்வை தொலைக்கின்றனர். உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றனர்.
இதுபோன்ற அரசு பஸ்கள் குறித்து முறையாக போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவிக்கிற போதிலும் அதிகாரிகள் தரப்பில் முறையாக கவனிக்காத நிலை உள்ளதாக இதை ஓட்டும் டிரைவர்,கண்டக்டர்கள் புகார் கூறுகின்றனர். அரசு இதன்மீது முழுமையாக கவனம் செலுத்தி கிராமங்களில் மக்கள் பயன்பாட்டிலிருக்கும் பழைய,கண்டமான அரசு பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
திண்டுக்கல் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பழைய,சேதமான அரசு பஸ்கள் பயன்பாட்டில் உள்ளது.
பல பகுதிகளில் இவைகள் பழுதாகி நிற்கும் சம்பவங்கள்,பிரேக் பிடிக்காமல் ரோட்டில் செல்வோர் மீது மோதும் சம்பவங்களும் நடக்கிறது. மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் மவுனம் கலைத்து போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு செய்து கண்டமான அரசு பஸ்களை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புது பஸ்கள் வருகிறது
திண்டுக்கல் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சசிக்குமார் கூறியதாவது: திண்டுக்கல் மண்டலத்தில் 4 மாதத்தில் 116 கண்டமான பஸ்கள் மக்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 2025ல் புதிதாக 60 பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணிமனைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பஸ்களை எடுக்கும் போது பிரேக் பிடிக்கிறதா என்பது குறித்தெல்லாம் கண்காணிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.