/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகன போக்குவரத்து வேகத்தில் எல்லை மீறல் நான்கு வழி சாலையில் தொடரும் விபத்துக்கள்
/
வாகன போக்குவரத்து வேகத்தில் எல்லை மீறல் நான்கு வழி சாலையில் தொடரும் விபத்துக்கள்
வாகன போக்குவரத்து வேகத்தில் எல்லை மீறல் நான்கு வழி சாலையில் தொடரும் விபத்துக்கள்
வாகன போக்குவரத்து வேகத்தில் எல்லை மீறல் நான்கு வழி சாலையில் தொடரும் விபத்துக்கள்
ADDED : பிப் 15, 2024 06:10 AM

வேடசந்துார்: நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்தில் வேகம் அதிகரித்துள்ள நிலையில் விபத்துக்களும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் விபத்து எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளது. தொடர் விபத்துக்களை தடுக்க வட்டார போக்குவரத்து துறை, போலீசார் முன் வர வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் இரு வழி சாலைகளாக இருந்த நிலையில் நான்கு வழி சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்தில் எந்த இடையூறும் இன்றி வாகனங்கள் வேகமாக செல்கின்றன. டீசல், தேய்மானம் உள்ளிட்ட செலவினங்கள் குறைந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் தொடர் கதையாகவே உள்ளது.
வழியிடை கிராம மக்கள் திடீரென குறுக்காக செல்வது, இருசக்கர வாகனங்களில் எதிர் திசையில் செல்வது இன்னும் தொடர்கிறது.
அதே நேரத்தில் நான்கு சக்கரம், கனரக வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நெடுஞ்சாலை ஓரம் குடியிருப்பவர்களுக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலே உள்ளனர்.
ஒரு ரோட்டில் செல்லும் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அடுத்த ரோட்டை தாண்டி பள்ளத்துக்கு செல்வதும், லாரிகள் கவிழ்வதும், கனரக வாகனங்கள் மோதிக் கொள்வதும், இதைவிட சென்டர் மீடியேட்டரில் லாரி பஸ்கள் ஏறி நிற்பதும் தொடர் கதையாக உள்ளது.
காலத்தின் வேகமும், மக்களின் தெளிவும் அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற விபத்துக்களால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் தங்களது பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி விபத்துக்களை தடுக்க முன்வர வேண்டும்.
வேகத் தை குறை க்கலாம்
கே.சுப்பிரமணி, முன்னாள் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், வேடசந்தூர்:பெரும்பாலான விபத்துகளில் ஓட்டுனரின் கவனக்குறைவுதான் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
எந்த வாகனமாக இருந்தாலும் நிதானமான பயணம் நிம்மதியை தரும். தற்போது நவீன கார்கள் வந்துவிட்ட நிலையில் 120, 140, 160 கிலோமீட்டர் வேகத்தில் போகலாம் என கூறுகின்றனர். ஆனால் இது நல்லதல்ல. கார்கள் 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திற்குள் செல்லலாம். இதை கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும். வாகனங்கள்விபத்திற்கு உள்ளாகிறது என்றால் அதற்குக் காரணம் டிரைவர் தான். வாகன வேகத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும்.
டூவீலர்களுக்கு கட்டுப்பாடு இல்லை
க.விஜயகுமார், சமூக ஆர்வலர், வேடசந்துார்:நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்களுக்காக போடப்பட்ட வெள்ளை கோட்டிற்கு அடுத்து செல்ல வேண்டும். பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் செல்லும் வழியிலே செல்கின்றன. பெரும்பாலான இடங்களில் எதிர் திசை பயணம் தொடர்கிறது. ஒட்டன்சத்திரம் ரோடு, கொன்னாம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சர்வீஸ் ரோடு வசதி இல்லை. இதனால் விபத்துகள் , உயிரிழப்புகள் தொடர்கின்றன.
நான்கு வழிச்சாலையை அமைத்தவர்கள் முறையான சர்வீஸ் ரோடுகளை அமைக்காமல் விட்டதால் மாவட்ட நிர்வாகம் சர்வீஸ் ரோடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அச்சத்துடனே பயணம்
வி.கருப்பையா, சமூக ஆர்வலர், வேடசந்துார்: இரண்டு வழி சாலைகள், நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்ட புதிதில் தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
விரைவாக செல்லும் வாகனங்களை கணக்கில் கொள்ளாமல் குறுக்கிடும் மக்கள் பலியாகினர். இந்தப் பாதிப்பு காலம் செல்ல செல்ல தான் குறைந்தது. அதேபோல் நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் கூடுதலான வேகத்தில் செல்வதும், ஆங்காங்கே குப்புற விழுந்து கிடப்பதும் விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர். போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள்தான் அவ்வப்போது நெடுஞ்சாலையில் நின்று ஆய்வு செய்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

