/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுப்புவேலி இல்லாமல் தொடரும் விபத்து
/
தடுப்புவேலி இல்லாமல் தொடரும் விபத்து
ADDED : நவ 02, 2025 04:27 AM
வடமதுரை: அய்யலுாரில் இருந்து பழைய அய்யலுார், கெங்கையூர், வைரபிள்ளைப்பட்டி வழியே அரசன்செட்டிபட்டிக்கு ரோடு செல்கிறது. இந்த ரோட்டை குருந்தம்பட்டி, புத்துார் பகுதியினரும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இங்கு ரோட்டையொட்டி தும்மினிக்குளத்தின் நீர் வரத்து வாய்க்கால் ஓடை இருப்பதால் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக இரவு நேரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு ரோடுகளில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக பல இடங்களில் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது பேரூராட்சி பராமரிப்பில் இருப்பதால் இத்தகைய பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படாமல் உள்ளது.
ஓடையையொட்டி தடுப்பு வேலி அமைக்கவும், வாய்ப்புள்ள இடங்களில் குளத்திற்கான நீர்வரத்தும் பாதிக்காத வகையில் ரோட்டினை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

