/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செயல்படாத சிக்னல்களால் விபத்துக்கள் அதிகரிப்புl; முறையான பராமரிப்பு இல்லாததால் அவதி
/
செயல்படாத சிக்னல்களால் விபத்துக்கள் அதிகரிப்புl; முறையான பராமரிப்பு இல்லாததால் அவதி
செயல்படாத சிக்னல்களால் விபத்துக்கள் அதிகரிப்புl; முறையான பராமரிப்பு இல்லாததால் அவதி
செயல்படாத சிக்னல்களால் விபத்துக்கள் அதிகரிப்புl; முறையான பராமரிப்பு இல்லாததால் அவதி
ADDED : அக் 06, 2025 04:02 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் பல முறையான பராமரிப்பின்றி செயல்படாமல் இருப்பதால் போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் விபத்து ஏற்படுவது அதிகமாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கொரோனா காலத்திற்குப் பிறகு அதிகமாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களில் பலர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், பலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் இயக்கி வருகின்றனர். ஒருவழிப்பாதையில் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
பல சந்திப்புக்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படுவது இல்லை. நல்ல முறையில் இயங்கும் சிக்னல்களை கூட போக்குவரத்து நிறைந்த நேரங்களில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் வாகனங்கள் சந்திப்புகளில் இஷ்டப்படி செல்வதால் விபத்து அதிகரிக்கிறது. மேலும் பல இடங்களில் சிக்னல்கள் முறையாக பராமரிப்பது இல்லை. சோலார் மூலம் இயங்கும் சிக்னல்கள் பழுது அடைந்து விட்டால் சரி செய்வது கிடையாது. சிக்னல் இயங்காத நேரங்களில் போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. இட வசதி உள்ள சந்திப்புகளில் ரவுண்டானா அமைத்தும் நெரிசலை குறைக்கலாம். செயல்படாத சிக்னல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்தை குறைக்க சிக்னல் தேவை மாவட்டத்தில் உள்ள பல ரோடுகளில் போக்குவரத்து அதிகம் உள்ளது. பஜார் பகுதியில் மூன்று மற்றும் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. மெயின் ரோட்டை வாகனங்கள் கடந்து செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்துநடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் பழநி ரோடும், தாராபுரம் ரோடும் சந்திக்கும் இடத்தில் முன்பு சிக்னல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது இப்பகுதியில் சிக்னல்கள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. - ஹெரால்டு ஜாக்சன் முன்னாள் பேராசிரியர்ஒட்டன்சத்திரம்