/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதம் ரோடுகளில் மழைநீர் தேக்கத்தால் விபத்து அதிகரிப்பு; தரமான 'பேட்ஜ்-ஒர்க்' பணிகளில் தேவை துரிதம்
/
சேதம் ரோடுகளில் மழைநீர் தேக்கத்தால் விபத்து அதிகரிப்பு; தரமான 'பேட்ஜ்-ஒர்க்' பணிகளில் தேவை துரிதம்
சேதம் ரோடுகளில் மழைநீர் தேக்கத்தால் விபத்து அதிகரிப்பு; தரமான 'பேட்ஜ்-ஒர்க்' பணிகளில் தேவை துரிதம்
சேதம் ரோடுகளில் மழைநீர் தேக்கத்தால் விபத்து அதிகரிப்பு; தரமான 'பேட்ஜ்-ஒர்க்' பணிகளில் தேவை துரிதம்
ADDED : அக் 12, 2025 04:13 AM

சின்னாளபட்டி திண்டுக்க்ல மாவட்டத்தில் சமீபத்திய சாரல் மழைக்கே தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரோடுகள், குண்டும் குழியுமாக மாறி பரவலாக மழை நீர் தேங்க துவங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் முதுகு தண்டுவட பாதிப்பு மட்டுமின்றி இரவு நேர விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 35 கி.மீ., என 1100க்கு மேற்பட்ட கிலோமீட்டர் துார ரோடுகள் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளன. இவை தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய, ஊராட்சிகள் அமைப்புகளின் வசமும் கணிசமான அளவில் ரோடுகள் உள்ளன.
இவற்றின் சீரமைப்பு, பராமரிப்பிற்கென ஒதுக்கீடு தொடர்ந்த போதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு இடங்களில் பராமரிப்பு கண்டுகொள்ளப்படுவது இல்லை. இதன் விளைவாக ரோடுகள் சேதமடைந்து பல மாதங்களானபோதும சீரமைப்பில் அலட்சியம் வாடிக்கையாகிவிட்டது. லேசான சாரல் மழைக்கும் ரோடுகள் சேதமடைவது வழக்கமாகிவிட்டது. சில வாரங்களுக்கு முன் பெய்த சாரல் மழையின்போது மாவட்டத்தில் குக்கிராமங்கள் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து ரோடுகளும் சேதமடைய துவங்கி உள்ளன.பல இடங்களில் ரோடுகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் அரிக்கப்பட்ட ரோட்டாரங்கள் மட்டுமின்றி, பரவியுள்ள பள்ளங்களும் விபத்துகளை ஏற்படுத்த தவறவில்லை.மழைநீரால் ரோடு சேதத்தின் தாக்கத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட வேண்டும்.
------...............
ஏட்டளவு பணிகளால் விபத்துகள்
காமலாபுரம்-மெட்டூர் இடையே புதிய தடத்தில் 4 வழிச்சாலை பணி நடக்கிறது. அதேவேளையில் பழைய வழித்தடமும் பல கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது அதிக போக்குவரத்து உள்ள தற்போதைய ரோடு பராமரிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற சூழல் மாவட்டம் முழுவதும் உள்ளது. மழைநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி உள்ளது. நடுரோட்டை கடந்து வலது புறத்தில் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. ரோடு சேதமடைந்து பரவலாக குழிகள் உருவாகி உள்ளன. டூவீலர்களில் செல்வோர் குழிகளால் நிலைதடுமாறுகின்றனர். சமீபத்திய அதிகப்படியான விபத்துகளுக்கு பராமரிப்பற்ற ரோடு சார்ந்த பிரச்னைகளே காரணமாக அமைந்துள்ளன. அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பாவி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பலியாகும் நிலை உள்ளது. சேதமடைந்த பகுதிகளில் பேட்ஜ்-ஒர்க் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
லட்சுமண மணிகண்டன்,(பா.ஜ., மாவட்ட சமூக ஊடக துணைத் தலைவர், பித்தளைப்பட்டி.
..........
-