/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவு நீர் பாய்ந்த ரோட்டிற்கு விடிவு
/
கழிவு நீர் பாய்ந்த ரோட்டிற்கு விடிவு
ADDED : அக் 12, 2025 04:23 AM

வடமதுரை : ரோட்டில் கழிவு நீர் பாய்ந்த வடமதுரை திண்டுக்கல் இணைப்பு ரோட்டிற்கு தினமலர் செய்தி எதிரொலியாக விடிவு காலம் பிறந்துள்ளது.
வடமதுரையில் திண்டுக்கல் ரோடு வளைவு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கழிவு நீர் வடிகால் கட்டமைப்பு சிதைந்து மூடிவிட்டது.
இதனால் கழிவு நீர் ரோட்டில் பாய்ந்து மக்களுக்கு அதிக சிரமத்தை தந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் இன் பாக்ஸ் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடி கவனம் செலுத்திய பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த சிதைந்த வடிகால் பழைய கட்டமைப்பை அகற்றிவிட்டு புதிதாக கட்டும் பணியை துவங்கி உள்ளது. தங்கள் பகுதி பிரச்னை தீர உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.