/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தலில் நின்று திருவோடு ஏந்தும் ஆசை உள்ளதா; கிராம சபையில் ஊராட்சி ஊழியரிடம் எம்.எல்.ஏ., கேள்வி

ADDED : அக் 12, 2025 04:25 AM
வடமதுரை : ''தேர்தலில் நின்று ஓட்டுக்காக திருவோடு ஏந்தும் ஆசை ஏதும் வைத்துள்ளீர்களா'' என வடமதுரை காணப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளரிடம் வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் கிராம மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டது. மாலப்பட்டி பத்மா , குடிநீர் குழாய்களில் சொற்ப அளவிலே நீர் கிடைப்பதாக தெரிவித்தபோது பதிலளித்த ஊராட்சி செயலாளர் வீரமணி , சிலர் கீழ் மட்டத்திற்கு தொட்டி அமைத்து அதிகப்படியான நீரை எடுப்பதால் இப்பிரச்னை ஏற்படுகிறது என்றார். எம்.எல்.ஏ.,காந்திராஜன் பேசுகையில்,'' முறைகேடாக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம். தேர்தலில் நின்று ஓட்டுக்காக திருவோடு ஏந்தும் ஆசை ஏதும் உள்ளதா. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் ஊராட்சி செயலாளர்கள் தங்கள் கடமையை தயக்கமின்றி செய்ய வேண்டும். குடிநீர் உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் போராட்டங்கள் நடந்தால் ஊராட்சி செயலாளர்களே பொறுப்பு. வரும் மாதங்களில் மிகுந்த கவனமுடன் அக்கறையுடன் பணி செய்ய வேண்டும். இங்கே மக்கள் தெரிவித்த குறைகளை பட்டியலிட்டு தீர்க்க முடியாத விஷயங்களை எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில் கிராம சபை கூட்டம் கண் துடைப்பானது என மக்கள் நினைப்பர் '' என்றார்.
தாசில்தார் சுல்தான்சிக்கந்தர், பி.டி.ஓ.,பஞ்சவர்ணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், நெசவாளரணி அமைப்பாளர் சொக் கலிங்கம் பங்கேற்றனர்.