sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'

/

மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'

மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'

மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'


ADDED : ஜூன் 17, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கன்றுகள்,மஞ்சள்பை வழங்குதல் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கையை மீட்கும் முயற்சியில் செம்பட்டி அச்சாணி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

அறிவியல் துணை கொண்டு வளர்ச்சி பல கண்டபோதும் சமுதாயத்தை முடக்கும் காரணிகளை எதிர்கொண்டு வாழ வேண்டியுள்ளது. நாகரீக வளர்ச்சியால் இயற்கை வளங்கள், நீர்நிலைகள், விளை நிலம் அழிப்பு, தொழிற்சாலை, வாகன கழிவு, புகையால் ஓசோன் பாதிப்பு என இயற்கைக்கு எதிராக சூழலை மாசுபடுத்தும் காரணிகளை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாசில்லாத சூழலை உருவாக்குவதில் இயற்கை ஆர்வலர்கள்,தன்னார்வ அமைப்புகள் அரசு துறைகள் என பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்துதல் வீட்டுத் தோட்டங்கள் அமைத்து அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாத்தல், நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைத்தல், சத்தான பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதுடன் இயற்கையான முறையில் இவற்றை விளைவித்து மண்ணை வளமாக்கும் சாத்தியக்கூறுகளும் முடுக்கி விடப்படுகின்றன. நிலத்தடிநீர் பாதிப்பு மட்டுமின்றி நஞ்சாக மாற்றுவதில், பாலிதீன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதில் மஞ்சப்பையின் உபயோகம் முதலிடம் பெறுகிறது.

இச்சூழலை வழக்கத்தில் கொண்டு வருவதை செம்பட்டி அச்சாணி தன்னார்வ அமைப்பு முக்கிய அம்சமாக முன்னெடுத்து வருகிறது. இவர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் மரக்கன்றுகள்,மஞ்சள் பைகள் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.

வெப்பமயமாதலை தடுக்கிறோம்


சோ.ராமு,ஒருங்கிணைப்பாளர்,செம்பட்டி: இயற்கையின் மகத்துவத்தை இன்னும் நாம் உணர வேண்டியது. மாசில்லா சமுதாயம் என்பது மரக்கன்று நடவு, மரம் வளர்ப்பு முறைகள் மட்டுமின்றி நிலத்தை விஷமாக்குவதை ஒழிக்க வேண்டும்.

மாணவர் குழுவினர் சுற்றுச்சூழலை மீட்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இதன் ஒரு பகுதியாக மரக்கன்றும் மஞ்சள் பையும் என்பது தனி இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் பொருட்டு அதற்கான முயற்சிகள் நடக்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு பிரிவாக பள்ளி மாணவர்களுக்கான துளிர் இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குக் கிராமங்களில் கூட இதற்கான கிளைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கிராமங்களிலும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தில் விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாலித்தீன் ஒழிப்பு புகையில்லா சூழல் மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம் மரக்கன்று நடவு பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல்வேறு பொது விழாக்களிலும் இவற்றின் பலனை உணர்த்தும் வகையில் மரக்கன்று மஞ்சள் பைகள் இலவசமாக வழங்குகிறோம்.

--விழிப்புணர்வு போட்டிகள்


ஆசிரியர் கருப்பையா,அமைப்பின் வழிகாட்டி,செம்பட்டி: மஞ்சள் பை உபயோக அவசியத்தை அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். வாசிப்பு திறன், புதிர், நடப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. வழக்கமான நிகழ்வுகளுடன் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் நிகழ்ச்சிகளும், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு, சுற்றுச்சூழலில் பாலித்தீன் குறித்த விழிப்புணர்வு, தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் சார்ந்த பிரசாரம், மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தல் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழிகாட்டுதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.






      Dinamalar
      Follow us