ADDED : பிப் 16, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி டிரையப் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடந்த மாநில ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றனர். மாநில அளவில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் டிரையப் அகாடமி மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் மோனீஸ்வரன், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ராகவன், கதிர்ஜீவா, யஸ்வந்த், நான்காம் வகுப்பு மாணவர் ரித்தீஷ் என ஐந்து பேர் முதலிடம் பிடித்தனர் .
இவர்கள் தென்னிந்திய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி தாளாளர் நடராஜன், செயலர் பிரபு, முதல்வர் வீரமணி பாராட்டினர்.

