ADDED : ஜன 03, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட கலைப்போட்டிகள் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
குரலிசை, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. பள்ளி 7ம் வகுப்பு மாணவி சனாதனா குரலிசையில் முதலிடம் , இதே வகுப்பு மாணவி ஹிமானிபுத்ரி பரத நாட்டியத்தில் முதலிடம் பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல இயக்குநர் பரிசு , சான்றிதழ் வழங்கினார். இருவரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை பள்ளி செயலாளர்கள் மங்கள்ராமி, காயத்ரி மங்கள்ராம், முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் வாழ்த்தினர்.