/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் அடிபட்டு இறக்கும் கால்நடைகளை காக்க தேவை நடவடிக்கை: ; வனம் ஒட்டிய ரயில் பாதைகளில் தேவை வேலிகள்
/
ரயிலில் அடிபட்டு இறக்கும் கால்நடைகளை காக்க தேவை நடவடிக்கை: ; வனம் ஒட்டிய ரயில் பாதைகளில் தேவை வேலிகள்
ரயிலில் அடிபட்டு இறக்கும் கால்நடைகளை காக்க தேவை நடவடிக்கை: ; வனம் ஒட்டிய ரயில் பாதைகளில் தேவை வேலிகள்
ரயிலில் அடிபட்டு இறக்கும் கால்நடைகளை காக்க தேவை நடவடிக்கை: ; வனம் ஒட்டிய ரயில் பாதைகளில் தேவை வேலிகள்
ADDED : பிப் 20, 2026 05:43 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் பாதைகளில் கால்நடைகள் ,விலங்குகள் அடிபட்டு இருக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த வனம் , கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தின் வழியே தினசரி 64 ரயில்கள், வாரத்திற்கு 111 ரயில்கள் சென்று வருகின்றன.
கொடைரோடு, வெள்ளோடு, அம்பாதுரை, எரியோடு, வடமதுரை, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி என கிராமங்கள் வழியே பிற மாவட்டங்களுக்கு ரயில் பாதை நீள்கிறது.
மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் திண்டுக்கல்லில் அதிக கிராமங்கள் வழியான ரயில் பாதை பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயத்தோடு, கால்நடை வளர்ப்பும் உள்ளதால் மேய்ச்சலுக்காக கால்நடைகளை புல்வெளிகள், சமதளப் பகுதிகளில் அதன் உரிமையாளர்கள் விடுகின்றனர்.
அவை உணவுக்காக ரயில் பாதைகளை ஒட்டி வரும்போது எதிர்பாராதவிதமாக ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
வடமதுரை, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விலங்கு வேட்டை தடுப்பு பட்டியலில் உள்ள பறவை இனமான மயில்கள் அடிபட்டு இறப்பது தொடர்கிறது. கால்நடைகள், வன விலங்குகள், ரயில்களில் அடிபட்டு இறப்பதை தடுக்க கிராமப் பகுதிகளை ஒட்டிய ரயில் பாதைகளில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.
அபராதம் போதாது
விலங்குகள் நல சட்டப்படி, ஆடு, மாடு, கோழிகளை தனியே சாலையில் விடுவது குற்றம். ரயில்வே பாதை, சாலைகளிலும் குறுக்கே பாய்ந்து இறக்கும்போது அதற்கு முழுக்காரணம் கால்நடையின் உரிமையாளரே. தெருவில் கட்டவிழ்த்து விடப்படும் விலங்குகளை பறிமுதல் செய்து காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும். கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் அதற்கான சிகிச்சை அளித்து காப்பகத்தில் பாதுகாக்க வேண்டும், அல்லது சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விட்டு அந்த நிதியை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகள் விலங்கு நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என விதிகள் உள்ளது. ஆனால் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. வெறும் அபராதம் மட்டும் விதிப்பதால்தான் கால்நடைகள் விபத்துகள் தொடர்கதையாக நடக்கிறன.மேலும் ரயிலில் அடிபட்டு இறக்கும் கால்நடைகளை காக்க ரயில் பாதைகளில் வேலிகள் அமைக்கவும் ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.
--பவுல்ராஜ், விலங்கு நல ஆர்வலர், திண்டுக்கல்

