/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியை மூலிகை நகரமாக மாற்றும் ஆர்வலர்கள்
/
பழநியை மூலிகை நகரமாக மாற்றும் ஆர்வலர்கள்
ADDED : மார் 11, 2024 06:32 AM

பழநி சுற்று வட்டார பகுதிகளை துாய்மையாக்க இயற்கை ஆர்வலர்கள் சேர்ந்து மூலிகை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழநி கோயில் நகரம் என்பதால் ஏராளமான மக்கள் தினமும் இங்கு வருகின்றனர்.
இதனால் இங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் கோயில்களில் மூலிகை மரங்களை நடவு வளர்த்து வருகின்றனர். அதற்கான விதைகளையும் கன்றுகளையும் தேடி பெறுகின்றனர். குறிப்பாக மரங்களில் மூலிகை மருத்துவத் தன்மை உள்ள மரங்கள் அதிக அளவில் கோயில் சார்ந்த இடங்களில் நடப்பட்டது.
இயற்கை ஆர்வலர்கள் பலர் பல்வேறு இடங்களில் மூலிகை மரங்களை நடவு செய்கின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை பழநி நகரில் தடுக்க கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தருவதால் இன்னும் உத்வேகமாக இவர்கள் எல்லா பகுதிகளிலும் மூலிகை மரக்கன்றுகளை நடவு செய்கின்றனர்.
பிளாஸ்டிக்கை தடுக்க வேண்டும்
கோகுல கிருஷ்ணன், இயற்கை ஆர்வலர், பழநி:பழநி சுற்றுவட்டார பகுதிகளில் மூலிகை மரங்களை பல்வேறு இடங்களில் நடவு செய்கிறோம். பழநி பகுதியில் மாசில்லா நிலையை உருவாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தனிப்பட்ட முறையிலும் தனிமனித ஒழுக்கத்தின் மூலம் தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுலா பகுதியான கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
நாற்றுகள் எளிதாக கிடைக்கிறது
செல்வி, இயற்கை ஆர்வலர், பழநி: நாங்கள் செல்லும் கோயில்கள் பெண்கள் குழுவாக இணைந்து மூலிகை மர விதைகள் மற்றும் கன்றுகளை நடுகிறோம். இதுவரை கொடுமுடி, மூலனுார், பழநி பெரியா வுடையார் கோயில், பழநி சுற்றுவட்டார பகுதிகளில் விதைகளை நடுகின்றனர். இப்போது மர விதைகள்,நாற்றுகள் கிடைக்கிறது. தோட்டக்கலைத் துறை மூலம் எளிதாக கிடைத்து வருகிறது.

