UPDATED : ஆக 31, 2025 05:46 AM
ADDED : ஆக 31, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் :வேடசந்துாரில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அரசு மருத்துவமனை முன்பு துவங்கிய ஊர்வலம் தாலுகா ஆபீஸ் வழியாக 38 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு குடகனாற்றில் கரைக்கப்பட்டது.
ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முரளிதரன், மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி பங்கேற்றனர்.