/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பங்குனி உத்திர விழாவிற்காக கூடுதல் பஸ்கள், சிறப்பு ரயில் பழநி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ADDED : மார் 14, 2024 04:38 AM
திண்டுக்கல்: ''பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி பங்குனி உத்திர விழாவிற்காக கூடுதல் பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக'' கலெக்டர் பூங்கொடி கூறினார். விழா தொடர்பாக பழநியில் நடந்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக தற்காலிக நிழற்பந்தல்கள் பல்வேறு இடங்களில் அமைக்கவும், குடிநீர் , மின் , கழிப்பறை உள்ளிட்டவைகள் போதுமான அளவு ஏற்பாடு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் 1800 4259925, 04545 -240293ல் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதலாக பஸ்களை இயக்கவும் பாலக்காடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழித்தடங்களில் மார்ச் 18 முதல் 27 வரை சிறப்பு ரயில்கள் இயக்கவும், அவற்றின் வழித்தடம், நேரம் ,கட்டணம் குறித்த விபரம் பஸ் ஸ்டாண்ட், கோயிலில் வைக்க ரயில்வே துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும் . தீயணைப்பு மீட்புப்பணி வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும் சீரான குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர் வரும் பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மருத்துவ முகாம்கள் , நெரிசலை தவிர்க்க தரிசன பாதைகளை சீர்படுத்தப்படும் என்றார். எஸ்,பி., பிரதீப், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் கலந்துகொண்டனர்.