/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் ஸ்டாண்ட்களில் கூடுதல் கட்டணம் முறைப்படுத்தலாமே; பாதுகாப்பும் இல்லாததால் தவிக்கும் மக்கள்
/
டூவீலர் ஸ்டாண்ட்களில் கூடுதல் கட்டணம் முறைப்படுத்தலாமே; பாதுகாப்பும் இல்லாததால் தவிக்கும் மக்கள்
டூவீலர் ஸ்டாண்ட்களில் கூடுதல் கட்டணம் முறைப்படுத்தலாமே; பாதுகாப்பும் இல்லாததால் தவிக்கும் மக்கள்
டூவீலர் ஸ்டாண்ட்களில் கூடுதல் கட்டணம் முறைப்படுத்தலாமே; பாதுகாப்பும் இல்லாததால் தவிக்கும் மக்கள்
ADDED : மார் 10, 2024 08:13 AM

மாவட்டத்திலுள்ள பஸ்ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் உட்பட பல இடங்களில் டூவீலர் வாகன நிறுத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 12 மணி நேரத்திற்கு ரூ.10வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.20 வசூல் செய்ய பட்டாலும் பெரும்பாலான டூவீலர் ஸ்டாண்ட்களில் வாகன பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட்களை சுற்றி செயல்படும் டூவீலர் ஸ்டாண்ட்களில் வாகன எண்ணிக்கையை அதிகமாக உள்ளடக்குவதால் நிறுத்தப்படும் வாகனங்கள்
ஒன்றையொன்று முட்டி மோதி கொள்ளும் வகையில் உள்ளன. இவ்வாறு நெரிசலில் நிறுத்தப்படும் வாகனங்களை திரும்ப வெளியில் எடுக்கப்படும்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. டூவீலர் ஸ்டாண்ட் பணியாளர்களிடம் முறையிட்டால் பொறுப்பான பதிலளிக்காமல் வாகன உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். மீறி சட்டம் பேசினால் டோக்கனில் குறிப்பிட்டுள்ள சேதமடையும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது' என்ற சிறிய எழுத்திலான
வாசகத்தை சுட்டி காட்டுகின்றனர்.
கட்டணம் அதிகமாக வசூலிக்க பட்டாலும் வாகனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாக திட்டமிடல்இல்லாததால் பெரும்பாலானோர் மனஉளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர். விழா காலங்கள், முகூர்த்த தினங்களில்டூவீலர் ஸ்டாண்ட்களை தேடி அதிக வாகனங்கள் வருவதால் பணத்திற்கு ஆசைப்பட்டு ஸ்டாண்ட்களுக்கு வெளியில் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த செய்து டோக்கன் போடும் செயலும் தொடர்கிறது. இதனால் வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து பாதுகாப்பின்றி கிடக்கும் சூழல் உருவாவதோடு போக்குவரத்திற்கும் இடையூறும் ஏற்படுகிறது. டூவீலர் கட்டண நிறுத்தமையங்களில் வாகன பாதுகாப்பை உறுதி செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

