ADDED : ஆக 28, 2026 04:02 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் நடந்து வரும் கட்டுமான பணிகள், செல்போன் பாதுகாப்பு மைய செயல்பாடு, பக்தர்கள் காத்திருப்பு கூட வசதிகள், கட்டுமான பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள், ரோப்கார் பராமரிப்பு பணி, வின்ச் ஸ்டேஷன் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முருகன் கோயிலுக்கு சென்று பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
