ADDED : ஆக 28, 2026 04:01 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி: மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டுப்பூச்சி வளர்ப்பு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் முகாம் பழநி ஆயக்குடி டி.கே.என்.புதுார் பகுதியில் நடந்தது.
உதவி இயக்குனர் ஜான் பார்த்திபன் தலைமை வகித்தார். ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பவித்ரன் பங்கேற்றார்.
முகாமில் மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், அதற்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, உயிரியல் முறைகள், தாவர பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.
மேலும் தொழுஉரம் மட்டும் பயன்படுத் தாமல் உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், இயற்கை ஊட்டச் சத்துக்கள் பயன்படுத்த வேண்டும் என அறி வுறுத்தல் வழங்கினர்.
