/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எல்லா ஆட்சியிலும் வன்கொடுமை நடக்கிறது சொல்கிறார் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்

ADDED : மார் 29, 2025 05:50 AM
திண்டுக்கல்: ''எல்லா ஆட்சியிலும் வன்கொடுமை, தீண்டாமை பிரச்னைகள் நடக்கிறது''என ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
ஒடுக்கப்பட்ட பலருக்காக நாங்கள் போராடுகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
அதை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்தார். அதற்கான பாராட்டு விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடக்க உள்ளது.
ஹிந்தி திணிப்பு திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மறுவரையறையால் தொகுதி குறைய கூடாது. அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க.,அரசு சாதகமாக தான் இருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தவறில்லை. அனைத்து ஆட்சியிலும் வன்கொடுமை, தீண்டாமை பிரச்னைகள் நடக்கிறது. தி.மு.க.,அரசு ஜாதியவாதிகளை அடக்க வேண்டும்.
வேங்கை வயல் சம்பவத்தில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிப்பதாக கூறியுள்ளார் . பா.ஜ.,வுடன் சேர்ந்ததால் தான் அவரது ஓட்டு வங்கி குறைந்தது என்றார்.