/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதிபராசக்தி மன்றத்தின் கஞ்சிக்கலைய ஊர்வலம்
/
ஆதிபராசக்தி மன்றத்தின் கஞ்சிக்கலைய ஊர்வலம்
ADDED : ஆக 09, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்:வேடசந்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், 20 ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா மற்றும் கஞ்சிக்கலையம் ஊர்வலம் நடந்தது.
மன்றத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மழை வளம் வேண்டியும், விவசாயம் செழித்திடவும், வியாபாரம் பெருகிடவும், அனைத்து மக்களிடமும் மனித நேயம் வளர வேண்டும் என்ற நோக்கில், ஊர்வலம் நடந்தது.
மன்றத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஆர். ஹெச்., காலனி, வடமதுரை ரோடு, ஆத்துமேடு, கடைவீதி, சாலைத்தெரு வழியாக மீண்டும் மன்றத்தை அடைந்தது.
வேடசந்தூர், பூத்தாம்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், அய்யர் மடம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் செவ்வாடை உடுத்தி திரளாக பங்கேற்றனர்.