/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : அக் 08, 2024 04:32 AM

நத்தம் : -நத்தம் அம்மா திருமண மண்டபத்தில் தெற்கு ஒன்றியம்,பேரூர் அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக் கவுண்டர், பார்வதி,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன் முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் சேக்ஒலி வரவேற்றார்.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., பேசினார்.
ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணி, ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா, ஒன்றிய ஜெ பேரவை இணை செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர்.