/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
நத்தத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : செப் 24, 2024 05:25 AM

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர் தலைமை வகித்தார்.
மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு,சுப்பிரமணி, முருகன் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சேக்ஒலி வரவேற்றார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் பேசினர்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் சுப்ரமணி,ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணி, சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர் பங்கேற்றனர்.