/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்: சீனிவாசன் அறிவுரை
/
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்: சீனிவாசன் அறிவுரை
ADDED : அக் 16, 2024 06:55 AM
வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் அ.தி.மு.க.,வினரிடையே கோஷ்டி பூசல் அதிகம் உள்ளது. இங்கு சில நிர்வாகிகள் கட்சியின் பொறுப்பாளர்களை மதிக்காமல் செயல்படுவதால் தேர்தல் நேரங்களில் அ.தி.மு.க., ஓட்டுக்கள் எதிரணிக்கு செல்வது பகிரங்கமான விஷயமாக உள்ளது.
இந்நிலையில் அய்யலுாரில் நடந்த ஊழியர் கூட்டத்தில் சில நிர்வாகிகளின் பேச்சில் கோஷ்டி பூசல் விஷயம் பகிரங்கமாக வெளிப்பட்டது. கூட்டத்தில் இறுதியாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், வடமதுரை தவிர வேறெங்கும் கோஷ்டி பூசல் பிரச்னை இல்லை. நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்திற்கு வந்தால் பேச்சுவார்த்தை தீர்வு காணலாம். அரசியலில் யாருக்கும் பதவி என்பது நிரந்தரம் கிடையாது.
வாய்ப்புகள் மாறி மாறி வரும். அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார். மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி, விவசாய அணி செயலாளர் டி.சி.ராஜமோகன், இணை செயலாளர் செல்ல பாண்டியன், ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் ராகுல்பாபா, ஐ.டி.,பிரிவு மதுரை மண்டல தலைவர் கவுதம் பங்கேற்றனர்.