/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம்,மினி ஹால் ஏசி திறப்பு விழா
/
எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம்,மினி ஹால் ஏசி திறப்பு விழா
எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம்,மினி ஹால் ஏசி திறப்பு விழா
எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம்,மினி ஹால் ஏசி திறப்பு விழா
UPDATED : மே 17, 2025 04:22 AM
ADDED : மே 17, 2025 01:50 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி எதிரே எம்.எஸ்.பி., ஆடிட்டோரியம்,மினி ஹால் ஏசி திறப்பு விழா நடந்தது.முதல் நிகழ்ச்சியாக திருப்பதி வெங்கடாசலபதி திருக்கல்யாணம் நடந்தது. இதன் பின்பு எம்.எஸ்.பி., ஆடிட்டோரியத்தை அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். எம்.எஸ்.பி., மினி ஹாலை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார்.எம் எம்.எஸ்.பி., நினைவு மேல்நிலைப்பள்ளி ஆட்சி குழு தலைவர் மதிச்செல்வன் தலைமை வகித்தார்.
எம்.எஸ்.பி., பள்ளி தாளாளர் முருகேசன் வரவேற்றார். கலெக்டர் சரவணன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ், நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல்ராஜ், பி.எஸ்.என்.ஏ., கல்லூரி இணைத் தலைவர் ரகுராம், திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லூரி முதன்மை செயலர் ரத்தினம், திண்டுக்கல் நாடார் உறவின்முறை தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், சமூக ஆர்வலர் காஜாமைதீன், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளி தாளாளர் பரமசிவம், எஸ்.எம்.பி.எம்., சி.பி.எஸ்.சி., பள்ளி தாளாளர் ராமதாஸ், கே.கே.ஏ.ஜி., பள்ளி தாளாளர் பாலன், மாணிக்கம் பைபர் உரிமையாளர் மதி, நிப்பான் பர்னிச்சர் உரிமையாளர் கணேஷ், பார்வதி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ஸ்ரீதர், பி.ம்.சொர்ணம் பிள்ளை அண்ட் சன்ஸ் இயக்குனர் வெங்கடேசன், இன்ஜினியர் தர்மலிங்கம் பங்கேற்றனர்.