/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக ஒலி எழுப்பும் சக்தி வாய்ந்த வெடிகளால் பாதிப்பு!
/
அதிக ஒலி எழுப்பும் சக்தி வாய்ந்த வெடிகளால் பாதிப்பு!
அதிக ஒலி எழுப்பும் சக்தி வாய்ந்த வெடிகளால் பாதிப்பு!
அதிக ஒலி எழுப்பும் சக்தி வாய்ந்த வெடிகளால் பாதிப்பு!
ADDED : பிப் 26, 2024 07:03 AM

மாவட்டத்தில் திருவிழாக்கள்,அரசியல் கட்சி ஊர்வலங்கள்,இறுதி ஊர்வலங்கள் நடக்கும் போது அதிக சக்தி வாய்ந்த வெடிகள் பயன்படுத்தப்படுகிறது.
இவை திடீரென காதை பிளக்கும் வகையில் அதிக ஒலி எழுப்புகின்றன. இதனால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கால்நடைகள்,பறவைகள் இந்த சத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடுகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மனிதனின் காதுகள் 120 டெசிபல் ஒலிகளை மட்டுமே தாங்க கூடியதாக உள்ளது. ஆனால் சக்தி வாய்ந்த பட்டாசுகள் ஒலிக்கும் போது இந்த அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பலருக்கு மன அழுத்தம் உட்பட பல பிரச்சினைகள் உருவாகிறது. பட்டாசுகள் வெடித்து முடித்த பின்பு ரோட்டுப் பகுதிகளில் காகித குப்பைகள் குவிகிறது.
இதை அகற்றுவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. மருத்துவமனைகள்,பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் அதிக சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தினர் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

