/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீண்டும் பழைய நடைமுறையிலேயே நெல் கொள்முதல்
/
மீண்டும் பழைய நடைமுறையிலேயே நெல் கொள்முதல்
ADDED : நவ 21, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை விளாம்பட்டி நேரடி நெல் கொள்முதல் மையத்தில்தினமலர் செய்தி எதிரொலியாக மீண்டும் பழைய நடைமுறைப்படியே நெல் கொள்முதல் நடைபெறுகிறது.
விளாம் பட்டி தமிழ்நாடு வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் அரசு ஆணைப்படி சொந்த நில பட்டாதாரர்களிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், குத்தகைதாரர்களிடம் நெல் வாங்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தற்போது நெல் கொள்முதல் மையத்தில் மீண்டும் பழைய நடைமுறையிலே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

