/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாழைதார்களை கிலோ கணக்கில் விற்கலாமே' தேவை வேளாண் விற்பனை துறை நடவடிக்கை

ADDED : மார் 19, 2025 05:23 AM

மாவட்டத்தில் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்துார், பழநி தாலுகாக்களில் நாடு, ஒட்டுநாடு, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, மொந்தன், கற்பூரவள்ளி வாழை விவசாயம் அதிக அளவில் நடக்கிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு தனியார் கமிஷன் மண்டி மூலம் ஏல நடைமுறையில் வாழை தார்களாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வாழைத்தாரில் ரகங்களுக்கு ஏற்ப 100 முதல் 300 காய்கள் இருக்கும். இவை தார்களாக விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக பல ஆண்டுகளாக புலம்பி வருகின்றனர். மற்ற காய்கறிகளைப் போன்று வாழை காய்களையும் கிலோ கணக்கில் விற்பனை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை செயல்படுத்தவேளாண் விற்பனைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.