ADDED : டிச 22, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: கொடைரோடு சிப்காட்டில் உலகத் தமிழ் வர்த்தக மையம் மூலம் த ரைஸ் எனும் ஏற்றுமதி நிறுவன துவக்க விழா நடந்தது.
நாகா குழும தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தென்மண்டல உலகத் தமிழ் வர்த்தக மைய இயக்குனர் டாக்டர் நாச்சிமுத்து வரவேற்றார். இம்மையத்தின் மூலம் விவசாயம், தமிழ் சுற்றுலா, ஏற்றுமதி வர்த்தகம், பாரம்பரிய விவசாய வழிமுறைகள் ஆகியவை நடைபெற உள்ளது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் தமிழக, மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுவதாக தென்மண்டல மைய இயக்குனர் நாச்சிமுத்து தெரிவித்தார். கனடா நாட்டு மைய இயக்குனர் அபூபக்கர் நன்றி கூறினார்.

