/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
/
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
ADDED : அக் 18, 2025 04:20 AM
திண்டுக்கல்: அ.தி.மு.க., 54ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிந்து மரியாதை செலுத்தப்பட்டது.அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார்.
மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள்சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமதுஇக்பால், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஜெ., பேரவை செயலாளர்பாரதி முருகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், இணைச் செயலாளர் பழனிச்சாமி,முன்னாள் ஆவின் தலைவர்திவான் பாட்சா,வேடசந்துார் ஒன்றிய செயலாளர் பழனியம்மாள்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் வீரமார்பன், கவுதம் கார்த்தி கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அ.தி.மு.க., கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், வத்தலக்குண்டு நகரம் சார்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் துாவி கொடியேற்றப்பட்டது ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அண்ணக்களஞ்சியம், நகர செயலாளர் பீர்முகமது தலைமை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் உதயகுமார், இளைஞரணி செயலாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் பாண்டிராதா, மாவட்ட மாணவர் அணி பொருளாளர் வெங்கடேசன், நகர இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் சேர்மன் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
கோபால்பட்டி: மாநில ஜெ.பேரவை இணைச்செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இளம்வழுதி, சின்னச்சாமி, மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்கள் சக்திவேல், இளைஞர் அணி நிர்வாகிகள் மணிகண்டன், அரவிந்த், விக்ரம், ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.