/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் அ.தி.மு.க.,வினர் மோதல்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் அ.தி.மு.க.,வினர் மோதல்
ADDED : டிச 25, 2024 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த போது அ.தி.மு.க., வினர் மோதிக்கொண்டனர்.
பழநி பெரியப்பா நகரில் நகராட்சி கவுன்சிலர் நடராஜ், தொழிற்சங்க நிர்வாகி காளியப்பன் இருவரும் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். சிலை முன் நின்று போட்டோ எடுக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

