ADDED : ஆக 26, 2025 04:14 AM

திண்டுக்கல்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திண்டுக்கல் மாவட்டம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசினார்.
அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், தேர்தல் பொறுப்பாளர்கள் ஆசைமணி, சரவணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், தர்மராஜ், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதி
முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, வி.டி.ராஜன், சேசு, முரளி, இக்பால், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி கலந்து கொண்டனர்.