/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க அ.தி.மு.க., முடிவு
/
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க அ.தி.மு.க., முடிவு
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க அ.தி.மு.க., முடிவு
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க அ.தி.மு.க., முடிவு
ADDED : பிப் 26, 2026 06:29 AM

திண்டுக்கல்: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில்திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 20 ஆயிரம், மேற்கு மாவட்டத்தின் சார்பில் 20 ஆயிரம் பேர் என 40 ஆயிரம் பேர் பங்கேற்க திண்டுக்கல்லில் நடந்த அ.தி.முக., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் நத்தம் ரோடு கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் மதுரைபொதுக்கூட்டம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி, மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிதுணைச் செயலாளர் ரவிமனோகர், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் விஜயபாலமுருகன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றச் செயலாளர் ராஜ்மோகன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி பங்கேற்றனர். 20 ஆயிரம் பேர் பிரதமர்பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுபோல் அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசுகையில், ''மார்ச்1ல் மதுரையில் பிரதமர், பொதுச் செயலாளர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
இதில் நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். பொதுச் செயலாளர் மூன்றாவது தேர்தல் அறிக்கையில் வேலையில்லா பட்டதாரிக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். இது மக்களிடம் எழுச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது. இந்த வாக்குறுதிகளை வீடுதோறும் கட்சியினர் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.கட்சியின் அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர்இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜமோகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மதுரை மண்டல தகவல்தொழில்நுட்பப்பிரிவு துணைச் செயலாளர் பிரேம் பங்கேற்றனர். 20 ஆயிரம் பேர் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதுஎன முடிவு செய்யப்பட்டது.

