/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரையன்ட் பூங்காவில் கவாத்து பணி
/
பிரையன்ட் பூங்காவில் கவாத்து பணி
ADDED : பிப் 26, 2026 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: - கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து எடுக்கும் பணி தொடங்கியது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடப்பது வழக்கம். இதற்காக 3 கட்ட மலர் நாற்று நடவு பணிகள் நடக்கும். 63வது மலர்கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள 3 ஆயிரம் ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி துவங்கியது. செடிகளில் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்து பூசப்பட்டன. தொழு உரம், களப் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு 45 நாட்களில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும். 63 வது மலர்கண்காட்சியின் போது நடவு செய்யப்பட்டுள்ள இதர மலர் செடிகளுடன் ரோஜா பூக்களும் பூத்து பயணிகளை மகிழ்விக்கும்.

