ADDED : செப் 03, 2025 09:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் ; நத்தத்தில் செப். 6-ம் தேதி மாலை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அவரை வரவேற்கும் விதமாக நத்தம் சட்டசபைதொகுதி அ.தி.மு.க., சார்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவுறுத்தலின் படி பஸ்ஸ்டாண்ட் முன்பாக 70 அடி உயர ராட்சத பலுான் பறக்க விடப்பட்டுள்ளது.
மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, சாணார்பட்டி ஒன்றிய ஜெ பேரவை இணை செயலாளர் விஜயன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.