/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்
/
அ.தி.மு.க., மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்
ADDED : ஜன 26, 2026 05:29 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாகல் நகரில் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளார் தனஞ்செயன் தலைமை வகித்தார்.
பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், ராஜன், முரளி, சேசு, முகமது இக்பால், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், அம்மா பேரவைச் செயலாளர் பாரதி முருகன், இளைஞரணிச் செயலாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்று மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தார்.
தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் கண்ணன், மகேஸ்வரன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், இணை செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்சா, தொழிற்சங்க செயலாளர்கள் ஜெயராமன், மாவட்ட கலை பிரிவுச் செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள், ஆட்டோ தொழிற்சங்கத்தினர், பொது மக்கள் கலந்து கொண்டனர். மாணவர் அணி துணைச் செயலாளர் சந்தோஷ் மணி நன்றி தெரிவித்தார்.

