/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டோல்கேட்டை திறக்க அ.தி.மு.க., எதிர்ப்பு நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
டோல்கேட்டை திறக்க அ.தி.மு.க., எதிர்ப்பு நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதம்
டோல்கேட்டை திறக்க அ.தி.மு.க., எதிர்ப்பு நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதம்
டோல்கேட்டை திறக்க அ.தி.மு.க., எதிர்ப்பு நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : ஜூன் 06, 2025 03:06 AM

சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் டோல்கேட் திறக்க எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., வினர் ஆய்வுக்கு வந்த நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்- நத்தம் சாலை மூன்று ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப்பட்டது. 10க்கு மேற்பட்ட இடங்களில் பாலங்கள், பழநி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல 4 அடி அகலத்தில் பேவர்பிளாக் நடைபாதை, கன்னியாபுரம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டது.
நேற்று மதுரை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் அதிகாரிகள் வந்து டோல்கேட் திறக்க இறுதிக்கட்ட ஆய்வு செய்தனர். இதை அறிந்த அப்பகுதி அ.தி.மு.க.,வினர் , பொதுமக்கள் டோல்கேட்டில் குவிந்தனர்.
சாலை தரமாக அமைக்கவில்லை. லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. குழிகளை மட்டும் மூடி தற்காலிக சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். பணம் வசூலுக்காக ரோட்டில் 6 திறப்புகள் அமைக்கப்பட்டு அதில் 4 அடைத்து வைக்கப்பட்டு 2ல் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. இதனால் நெரிசலும் தாமதமும் ஏற்படுகிறது. அனைத்து பாதைகளையும் திறக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் டோல்கேட்டை திறக்க கூடாது என கூறி வாக்குவாதம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறினர். சாலை அடைப்புகள் அனைத்தையும் அகற்றினர். இதை தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்தை கைவிட்ட அ.தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.