/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் அமைச்சர் பெயர் அழிப்பு மீண்டும் எழுதிய அ.தி.மு. க.,வினர்
/
முன்னாள் அமைச்சர் பெயர் அழிப்பு மீண்டும் எழுதிய அ.தி.மு. க.,வினர்
முன்னாள் அமைச்சர் பெயர் அழிப்பு மீண்டும் எழுதிய அ.தி.மு. க.,வினர்
முன்னாள் அமைச்சர் பெயர் அழிப்பு மீண்டும் எழுதிய அ.தி.மு. க.,வினர்
ADDED : ஜூன் 06, 2025 03:02 AM
நத்தம்: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அரசுகலைக்கல்லுாரி தொடங்கபட்டுள்ளது. இங்கு   எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில்  கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டியதற்காக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெயர் எழுதப்பட்டிருந்த நிலையில்  பெயர் அழிக்கபட்டது.
மாநில அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட  அ.தி.மு.க.,வினர்   பெயரை எழுத கோரி போலீசாரிடம் வலியுறுத்தினர்.  அரசு கல்லுாரியில் யாருடைய பெயரும் இடம் பெறக் கூடாது என்பதால் கலெக்டர்  உத்தரவுப்படி  அழிக்கபட்டது என போலீசார் தெரிவித்தனர்.  இதை ஏற்க மறுத்த அ.தி.மு.க.,வினர்  மீண்டும் முன்னாள் அமைச்சர் பெயரை  அங்கு எழுதினர்.