/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோ இன்றி அ.தி.மு.க., போஸ்டர்கள்: மூத்த நிர்வாகிகள் குமுறல்

ADDED : ஜூலை 29, 2025 05:23 AM

திண்டுக்கல்; புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க., சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்கள் இடம்பெறாதது சீனியர் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., வில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி, மாணவரணி உள்ளிட்டவற்றிற்கு புதிய நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நியமித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பதவி பெற்ற நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்கள் இல்லை. பொதுச்செயலாளர் பழனிசாமி படம் மட்டுமே பெரிதாக உள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.
கட்சியினர் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாத போஸ்டர்கள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும். சம்மந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கவும், போஸ்டர்களை மாற்றவும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனர்.