/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
நத்தத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:29 AM

நத்தம்: திண்டுக்கல் கிழக்கு,மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மா விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடி கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், குறைந்த பட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய கோரி மாங்காய்களை சாலையில் கொட்டியப்படி நத்தம் பஸ்ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி வரவேற்றார். அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், இளைஞர் ,இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, மணிகண்டன், சின்னு,சுப்பிரமணி, முருகன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, ஜெயபாலன், நகர அவைத்தலைவர் சேக்ஒலி, மாவட்ட வர்த்தகர் அணி பொருளாளர் சி.ஆர்.ஹரிகரன், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் விஜயன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் கலந்து கொண்டனர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:தமிழகத்தில் பணத்தை வைத்து தி.மு.க., ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
மா விவசாயிகள் விலை வீழ்ச்சியால் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது : நத்தம் பகுதியில் அதிகளவில் மா விளைச்சல் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை, கல்லாமை 1 கிலோ ரூ.5க்கு விற்பனையாகிறது. உற்பத்தி செலவோ கிலோவிற்கு ரூ.10 ஆகிறது. தமிழக அரசே மாங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.