/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., ஓட்டு வங்கி 10 முதல் 15 சதவீதம் குறைந்துவிட்டது அமைச்சர் பெரியசாமி பேட்டி

ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
திண்டுக்கல் : அ.தி.மு.க., ஓட்டு வங்கி 10 முதல் 15 சதவீதம் குறைந்துவிட்டது என அமைச்சர் பெரிசாமி கூறினார்.
திண்டுக்கல்லில், ஓரணியில் தமிழகம் கோட்பாடு குறித்து மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மத்திய அரசு மக்களை வஞ்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கை ஏற்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் நிதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஹிந்தி திணிப்பை விடமாட்டோம் என முதல்வர் மு.க., ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தி.மு.க.,வுக்கு வாக்குவங்கி இல்லையென முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எப்படி கூறுகிறார். கூட்டல் கணக்கு அவருக்கு தெரியவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க., வினரே மறந்து விட்டனர். காலப்போக்கில் ஜெயலலிதா சிலையை எடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் சிலையை வைத்தாலும் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை.
அ.தி.மு.க., ஓட்டு வங்கி 10 முதல் 15 சதவீதம் குறைந்துவிட்டது. மக்களிடம் அவர்களின் மதிப்பு குறைந்துவிட்டது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராது என மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்பது உண்மைக்கு மாறானது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார். கனவு இல்ல திட்டத்தில் யாரும் கையூட்டு பெற்றால் அதுகுறித்த தகவலை எனக்கு தெரியப்படுத்தவும் என்றார்.