ADDED : மார் 28, 2026 10:51 PM

நத்தம்;''-திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., , அதன் கூட்டணி கட்சிகளே வெல்லும் ''என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
நத்தம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இல்லத்தில் நடந்த வாழ்த்து கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளே நுாறு சதவீதம் வெல்லும். தி.மு.க., அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
ஜெ.பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., தேன்மொழி,ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, ஜெயபாலன், சுப்பிரமணி, சின்னு, மணிகண்டன், முருகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இணைச்செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரஷர் பாலு, பொருளாளர் ஹரிஹரன், நிர்வாகிகள் சி.ஆர்., சகுபர் சாதிக், சின்னாகவுண்டர் பங்கேற்றனர்.
