நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, செஞ்சுருள் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் நடந்தது.
ஆர்.டி.ஒ, சக்திவேல் தலைமை வகித்தார். தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மேற்பார்வையாளர் ஜெசிந்தா முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை உதவி பேராசிரியர் மலர்விழி, உடற்கல்வி உதவி பேராசிரியர் இவாஞ்சலின் கலந்து கொண்டனர்.