/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிப்.11ல் தலைமை செயலகம் முன் காத்திருப்பு போராட்டம்; ஏ.ஐ.டி.யு.சி, மாநில தலைவர் அறிவிப்பு

ADDED : ஜன 12, 2025 05:08 AM
திண்டுக்கல் : ''பிப்.11ல் சென்னை தலைமை செயலகம் முன் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் ''என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி.,சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 21 ஆண்டுகளாக சில்லரை மது விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 21 ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களை மாறி மாறி வந்த அரசுகள் பணி நிரந்தம்,ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.
இதனால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.11ல் சென்னை தலைமை செயலகம் முன் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் . தமிழக அரசு பல நல்ல காரியங்களை செய்தாலும் பல துறைகளில் அவுட்சோர்சிங் எனும் வெளி முகமை மூலம் நிரந்தரமில்லாத முறையில் தொழிலாளர்களை அமைப்பது கவலைக்குரியது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான கடைகளில் சில்லரை மது விற்பனை நடப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.
இத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித சலுகைகளும் இல்லை. அனைத்து தகவல்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
எந்த தகவல்களும் வரவில்லை. தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தும் கொள்ளைகளை எடுத்துள்ளது. அரசியல் காரணமாக சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதுபோன்ற கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வேறு ஏதாவது பணி வழங்க வேண்டும் என 10 ஆண்டுகளாக போராடுகிறோம் என்றார்.